Me Thinks

Name:
Location: Bangalore, Karnataka, India

Monday, June 18, 2007

ஓவியமும் நானும்

அம்பி அண்ணா கிப்ட்க்கு கலர் குடுக்கும் போது நா ஆறாவது படிச்சப்போ நடந்த விஷயம் நினைவுக்கு வந்தது....சேரி போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சே.....இதயே போட்டிடலாம்னு போட்டுடேன் :)


Quarterly exam அப்போ..


அம்மா, எல்லா படத்தையும் நல்லா பாத்து வெச்சுகிட்டியா? 6 படம் தான இருக்கு.. எது கேட்டாலும் வரைஞ்சிடுவேல்ல?? இது அப்பா.


ம்ம்ம்..வரைஞ்சிடுவேன்.. ஆனா தேசிய கொடிய கேக்கனும்னு ப்ரயெர் பண்ணிக்கோங்கப்பா.. இது நா..


காலேல அம்மா டாடா..அப்பா டாடா.. போட்டு ஸ்கூலுக்கும் கிளம்பியாச்சு..
பரிட்சை 10 மணிக்கு..

9 மணிக்கு உள்ள நா போகும் போதே.. ஒரே பேச்சு..ஏய்,, புதுசா மாம்பழமும் சேர்த்துட்டாங்களாம்.. ஸோ அதும் வரலாம்னு..எனக்கு கொஞ்சம் பயமா இருந்தச்சு.. ஆனா காமிச்சுக்கல..மணி 9.30.


ஒரு சின்ன பிளாஷ்பேக்.
நா அப்போதான் பாட்மின்டன் டீம்ல சேர்ந்து இருந்ததலா.. இந்த டிராயிங் கிளாஸ், கூடை பின்னர கிளாஸ் எல்லாம் எனக்கு கிரவுண்ட்லதான்.. பிராக்டிஸ்னு சொல்லி ஓடிடுவேன்.. நா நல்ல படிக்கறதால எந்த மிஸ் ம் அத கண்டுக்கல..ஸோ ஆல்வேஸ் எஸ்கேப் :) வரைய சொல்லற படத்தயும் வீட்டுக்கு கொண்டு போய் அம்மாகிட்ட குடுத்து வரைஞ்சுக்குவேன்.. இதுக்கு ஒரு பரிட்சை இருக்குனு தெரியாததுனால எங்க அம்மாவும் வரைஞ்சு குடுத்திடுவாங்க..ஸோ நோட் புல்லா 8/10 இல்ல 9/10 மார்க்.


பரிட்சை ஆரம்பிச்சாசு..

நீங்க எல்லாம் எதிர்பார்த்த மாதிரியே.. எனக்கு மாம்பழம் வந்திருச்சு... :(


கையும் ஓடல.. காலும் ஒடல...எப்பவோ..யாரோ "மு" போட்டு அத மாம்பழமா மாத்தறது சொன்னது நினைவுக்கு வந்து.. நானும் 'மு' போட்டு போட்டு டிரைப் பண்ணினேன்.. சே.. வரவே இல்ல..ஒரு 25 தடவ அழிச்சு அழிச்சு போட்டிர்பேன்.. இன்னும் 15 நிமிஷம் தான் இருக்குனு மிஸ் சொல்லராங்க..


ஒரு வழியா..ஒரு "மு" வ மாம்பழம் ஆக்கிடேன் :D ஆனா என்ன பெரிய.. A4 சைஸ் ஷீட்ல ஒரு 25 பைசா அளவுக்கு கூட அது இல்ல.. :( எப்படியோ பாதி மஞ்சள்..பாதி சிவப்புனு கலர் குடுத்துட்டு.. பேப்பரயும் குடுத்துட்டு வெளிய வந்தா... ஒரே பேச்சு.. டிராயிங் புக்ல அதான் முதல் படம்..அழகா இருந்தது.. ஏதோ கட்டம் கட்டி மெஷர்மென்ட் வச்சு சூப்பரா போட்டிர்ந்தான்....ஒரு 5 நிமிஷம் பார்த்திருந்தா கூட வரைஞ்சிர்பேன் சே..ஆனது ஆச்சுனு வீடு வந்து சேர்ந்தேன்..


வீட்ல..எனக்கு தெரியாத மாம்பழத்த கேட்டுட்டாங்க..ஸோ பெயில் ஆனாலும் ஆவேன்.. ஆன இந்த மார்க்க சப்ஜெக்ட் மார்க்ஸ் ஒட சேர்க்க மாட்டாங்க..ஸோ பர்ஸ்ட் வந்திடுவேன்.. கவலை படாதீங்கனு ஆறுதல் சொல்லிட்டு மறந்தே போய்டேன்..


ஒரு 10 நாள் கழிச்சு பேப்பர் குடுத்தாங்க.. நல்ல வேள மத்த பேப்பர்ஸ் எல்லாம் அதுக்கு முன்னாடியே குடுத்து..ரேங்க் கார்டும் குடுத்துட்டாங்க.எனக்கு 10 கு 3 1/2 மார்க்..டிராயிங் டீச்சர் கு ஒரே கடுப்பு.. ஏன்மா எல்லா சப்ஜெக்ட்டும் நல்லா படிக்கற..ஒரு மாம்பழம் வரைய தெரியலயா?னு கேட்டுடாங்க :(


நா தல கவுந்து நின்னேன்.. :(. அதுல இருந்து டிராயிங்னாலே எனக்கு பிடிக்காது.. டிராயிங் மிஸ்க்கு நான் நாலே பிடிக்காது.. டிராயிங் கிளாஸ்ல என்ன நடந்தாலும் கண்டுக்கவே மாட்டேன்..


half yearly exam வந்தது...


நா முதநாள் உக்காந்து.. என்ன என்ன படம் இருக்குனு டைட்டில் மட்டும் பார்த்தேன்.. எல்லாமே நாம டைலி லைப்ல யூஸ் பண்ணற பொருட்கள்தான் ஸோ.. படத்த பாக்காமலே.. அது எப்டி இருக்கும் , என்ன கலர் குடுக்கனும்னு யோசிச்சு வச்சு கிட்டேன்

மான், விசிரி, பூ கொத்துனு 3 படம் வந்தது.. நா எங்க அம்மாச்சியோட விசிரி ய மனசுல வச்சுக்கிட்டே.. நல்ல குஞ்சம் எல்லாம் வெச்சு கலர்புல்லா ஒரு விசிரி (இந்தா தடவ நல்லா பெரிசா) வரைஞ்சேன்.

வெளிய வந்து புக்க பாத்தா..அவன் குஞ்சம்லாம் இல்லாம ஏதோ பேட் மாதிரி ஒரு விசிரிய வரைஞ்சு போட்டிர்ந்தான்.. :(

10 நாள் கழிச்சு பேப்பர் தந்தாங்க..இந்தவாட்டி 10க்கு 9.. அந்த டிராயிங் டீச்சர் அப்போ வரைக்கும் யாருக்கும் 7க்கு மேல போட்டதே இல்ல..

அப்பறத்துல இருந்து என்ன, எனக்கு டிராயிங்னா பயங்கர இஷ்டம்.. :)

Be happy

Priya