Name:
Location: Bangalore, Karnataka, India

Monday, June 18, 2007

ஓவியமும் நானும்

அம்பி அண்ணா கிப்ட்க்கு கலர் குடுக்கும் போது நா ஆறாவது படிச்சப்போ நடந்த விஷயம் நினைவுக்கு வந்தது....சேரி போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சே.....இதயே போட்டிடலாம்னு போட்டுடேன் :)


Quarterly exam அப்போ..


அம்மா, எல்லா படத்தையும் நல்லா பாத்து வெச்சுகிட்டியா? 6 படம் தான இருக்கு.. எது கேட்டாலும் வரைஞ்சிடுவேல்ல?? இது அப்பா.


ம்ம்ம்..வரைஞ்சிடுவேன்.. ஆனா தேசிய கொடிய கேக்கனும்னு ப்ரயெர் பண்ணிக்கோங்கப்பா.. இது நா..


காலேல அம்மா டாடா..அப்பா டாடா.. போட்டு ஸ்கூலுக்கும் கிளம்பியாச்சு..
பரிட்சை 10 மணிக்கு..

9 மணிக்கு உள்ள நா போகும் போதே.. ஒரே பேச்சு..ஏய்,, புதுசா மாம்பழமும் சேர்த்துட்டாங்களாம்.. ஸோ அதும் வரலாம்னு..எனக்கு கொஞ்சம் பயமா இருந்தச்சு.. ஆனா காமிச்சுக்கல..மணி 9.30.


ஒரு சின்ன பிளாஷ்பேக்.
நா அப்போதான் பாட்மின்டன் டீம்ல சேர்ந்து இருந்ததலா.. இந்த டிராயிங் கிளாஸ், கூடை பின்னர கிளாஸ் எல்லாம் எனக்கு கிரவுண்ட்லதான்.. பிராக்டிஸ்னு சொல்லி ஓடிடுவேன்.. நா நல்ல படிக்கறதால எந்த மிஸ் ம் அத கண்டுக்கல..ஸோ ஆல்வேஸ் எஸ்கேப் :) வரைய சொல்லற படத்தயும் வீட்டுக்கு கொண்டு போய் அம்மாகிட்ட குடுத்து வரைஞ்சுக்குவேன்.. இதுக்கு ஒரு பரிட்சை இருக்குனு தெரியாததுனால எங்க அம்மாவும் வரைஞ்சு குடுத்திடுவாங்க..ஸோ நோட் புல்லா 8/10 இல்ல 9/10 மார்க்.


பரிட்சை ஆரம்பிச்சாசு..

நீங்க எல்லாம் எதிர்பார்த்த மாதிரியே.. எனக்கு மாம்பழம் வந்திருச்சு... :(


கையும் ஓடல.. காலும் ஒடல...எப்பவோ..யாரோ "மு" போட்டு அத மாம்பழமா மாத்தறது சொன்னது நினைவுக்கு வந்து.. நானும் 'மு' போட்டு போட்டு டிரைப் பண்ணினேன்.. சே.. வரவே இல்ல..ஒரு 25 தடவ அழிச்சு அழிச்சு போட்டிர்பேன்.. இன்னும் 15 நிமிஷம் தான் இருக்குனு மிஸ் சொல்லராங்க..


ஒரு வழியா..ஒரு "மு" வ மாம்பழம் ஆக்கிடேன் :D ஆனா என்ன பெரிய.. A4 சைஸ் ஷீட்ல ஒரு 25 பைசா அளவுக்கு கூட அது இல்ல.. :( எப்படியோ பாதி மஞ்சள்..பாதி சிவப்புனு கலர் குடுத்துட்டு.. பேப்பரயும் குடுத்துட்டு வெளிய வந்தா... ஒரே பேச்சு.. டிராயிங் புக்ல அதான் முதல் படம்..அழகா இருந்தது.. ஏதோ கட்டம் கட்டி மெஷர்மென்ட் வச்சு சூப்பரா போட்டிர்ந்தான்....ஒரு 5 நிமிஷம் பார்த்திருந்தா கூட வரைஞ்சிர்பேன் சே..ஆனது ஆச்சுனு வீடு வந்து சேர்ந்தேன்..


வீட்ல..எனக்கு தெரியாத மாம்பழத்த கேட்டுட்டாங்க..ஸோ பெயில் ஆனாலும் ஆவேன்.. ஆன இந்த மார்க்க சப்ஜெக்ட் மார்க்ஸ் ஒட சேர்க்க மாட்டாங்க..ஸோ பர்ஸ்ட் வந்திடுவேன்.. கவலை படாதீங்கனு ஆறுதல் சொல்லிட்டு மறந்தே போய்டேன்..


ஒரு 10 நாள் கழிச்சு பேப்பர் குடுத்தாங்க.. நல்ல வேள மத்த பேப்பர்ஸ் எல்லாம் அதுக்கு முன்னாடியே குடுத்து..ரேங்க் கார்டும் குடுத்துட்டாங்க.எனக்கு 10 கு 3 1/2 மார்க்..டிராயிங் டீச்சர் கு ஒரே கடுப்பு.. ஏன்மா எல்லா சப்ஜெக்ட்டும் நல்லா படிக்கற..ஒரு மாம்பழம் வரைய தெரியலயா?னு கேட்டுடாங்க :(


நா தல கவுந்து நின்னேன்.. :(. அதுல இருந்து டிராயிங்னாலே எனக்கு பிடிக்காது.. டிராயிங் மிஸ்க்கு நான் நாலே பிடிக்காது.. டிராயிங் கிளாஸ்ல என்ன நடந்தாலும் கண்டுக்கவே மாட்டேன்..


half yearly exam வந்தது...


நா முதநாள் உக்காந்து.. என்ன என்ன படம் இருக்குனு டைட்டில் மட்டும் பார்த்தேன்.. எல்லாமே நாம டைலி லைப்ல யூஸ் பண்ணற பொருட்கள்தான் ஸோ.. படத்த பாக்காமலே.. அது எப்டி இருக்கும் , என்ன கலர் குடுக்கனும்னு யோசிச்சு வச்சு கிட்டேன்

மான், விசிரி, பூ கொத்துனு 3 படம் வந்தது.. நா எங்க அம்மாச்சியோட விசிரி ய மனசுல வச்சுக்கிட்டே.. நல்ல குஞ்சம் எல்லாம் வெச்சு கலர்புல்லா ஒரு விசிரி (இந்தா தடவ நல்லா பெரிசா) வரைஞ்சேன்.

வெளிய வந்து புக்க பாத்தா..அவன் குஞ்சம்லாம் இல்லாம ஏதோ பேட் மாதிரி ஒரு விசிரிய வரைஞ்சு போட்டிர்ந்தான்.. :(

10 நாள் கழிச்சு பேப்பர் தந்தாங்க..இந்தவாட்டி 10க்கு 9.. அந்த டிராயிங் டீச்சர் அப்போ வரைக்கும் யாருக்கும் 7க்கு மேல போட்டதே இல்ல..

அப்பறத்துல இருந்து என்ன, எனக்கு டிராயிங்னா பயங்கர இஷ்டம்.. :)

Be happy

Priya

38 Comments:

Blogger Bharani said...

first :)

5:04 PM  
Blogger Bharani said...

appa...ippa poi padikaren :)

5:04 PM  
Blogger Bharani said...

//ஆனா தேசிய கொடிய கேக்கனும்னு ப்ரயெர் பண்ணிக்கோங்கப்பா..//....idhu allavo naatupatru :)

5:08 PM  
Blogger Bharani said...

//புதுசா மாம்பழமும் சேர்த்துட்டாங்களாம்//...idhu enna kovilpatti maambazhama :)

5:08 PM  
Blogger Bharani said...

//நா நல்ல படிக்கறதால//....aniyaayathuku poi solreenga...

5:08 PM  
Blogger Bharani said...

//கையும் ஓடல.. காலும் ஒடல//.....kaal oodum....adhu eppadi kai oodum ;)

5:08 PM  
Blogger Bharani said...

ambi-ku enna maambhazham dhaan varanji kudutheengala enna....adha sollave illaye...

5:09 PM  
Blogger Bharani said...

evlo aachi....

5:09 PM  
Blogger Bharani said...

okie 9...

5:09 PM  
Blogger Bharani said...

10...veetuku neramaachi....naan kelambaren.....

5:10 PM  
Anonymous Anonymous said...

@Bharani,
//....idhu allavo naatupatru :) //
ada.. adhu thaan simple nu keaten... coloring sense m thevai illa :D

//....aniyaayathuku poi solreenga... //
Nammba makkal unmaiya epo nambirkaanga??

//.....kaal oodum....adhu eppadi kai oodum ;) //
oru flow la vandhuduchu.. :(

//ambi-ku enna maambhazham dhaan varanji kudutheengala enna....adha sollave illaye... //
adhu next post :D

unga pasathuku alave illanga..10 comments potirkeenga..awwww...

11:34 AM  
Blogger Raji said...

Ahaha superaa drawing varanjirukeenga ngoo...

U know water color naan 4th padikku boadhu kodukka sonaanga...Naan enna panninaen theriyuma andha water eduthuttu vandhu enga miss varanjurundha water painting maela uthitaen...Adhula irundhu andha miss enna paartha oru murai dhaan...

Aana thappu en maela illa...
Water colorunaa colorula wateru uthanumunu naan ninaichukittaen..
solli kudukkuravanga olunga solli kudukanumula ..:P

2:22 PM  
Blogger My days(Gops) said...

13la correct ah vandhuten paartheeengala....

2:52 PM  
Blogger My days(Gops) said...

//சேரி போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சே.....இதயே போட்டிடலாம்னு போட்டுடேன் :)
//

koooduvancheri ah pathi post ah?

2:52 PM  
Blogger ACE !! said...

//நா நல்ல படிக்கறதால எந்த//

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்னு கேள்வி பட்டிருக்கீங்களா?? :D :D

6:08 AM  
Blogger ACE !! said...

மாம்பழத்த முன்ன பின்ன பாத்ததே இல்லயா.. அத வரைய என்ன கஷ்டம்.. அதுக்கு இவ்ளோ பில்டப்பா?? :((

6:09 AM  
Blogger ACE !! said...

//எனக்கு 10 கு 3 1/2 மார்க்..டிராயிங் டீச்சர் கு ஒரே கடுப்பு.. ஏன்மா எல்லா சப்ஜெக்ட்டும் நல்லா படிக்கற..ஒரு மாம்பழம் வரைய தெரியலயா?னு கேட்டுடாங்க :(
//

அலோ.. யார் கிட்ட கதை விடறீங்க.. அட்லீஸ்ட் இதுலயாவது மார்க் வாங்க மாட்டியான்னு கேட்டிருப்பாங்க..

6:10 AM  
Blogger ACE !! said...

//அப்பறத்துல இருந்து என்ன, எனக்கு டிராயிங்னா பயங்கர இஷ்டம்.. :)//

நல்லா இருந்தா சரி தான் :D :D..

6:11 AM  
Blogger gils said...

!!!! ethanavathu class padichapo idelaam?? paravala..20 30 years munnadi nadanthathu kuda thulliyama solirukeenga

5:55 PM  
Blogger Harish said...

ninaithadellam nadanduvitaal.... :-)

8:20 AM  
Blogger MyFriend said...

.:: மை ஃபிரண்ட் ::. was here.. ஹீஹீ..

பொருமையா வந்து படிச்சுட்டு கமேண்டுறேன்.. ;-)

7:17 PM  
Blogger Ponnarasi Kothandaraman said...

Hehehe Same pinch.. Enakum drawing na kolla usuru..Aaana athu than olunga varathu ;)

4:28 PM  
Anonymous Anonymous said...

//அம்பி அண்ணா கிப்ட்க்கு கலர் குடுக்கும் போது நா ஆறாவது படிச்சப்போ நடந்த விஷயம் நினைவுக்கு வந்தது....//

ennathu giftaaa? engamaaa kudutha? :)

ithukku peru thaan alwaaavaa? avvvvvvvvv :)

6:01 PM  
Anonymous Anonymous said...

மு = மாம்பழம்
சூப்பர் ஐடியா!

if so,y = வாழைபழமா? :)

6:04 PM  
Anonymous Anonymous said...

sari, roundaaa oru 25!

சீக்ரமா உங்க வீட்டுக்கு கிப்ட் வாங்கிக்க வரேன். :)

மாம்பழம், வாழைபழம் எல்லாம் வரைஞ்சு தந்து என்னை வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ண கூடாது! சரியா? :p

6:07 PM  
Blogger ஜி said...

//நா தல கவுந்து நின்னேன்.. :(. //

ithellaam namma vaazkaila sagajamla.. ithukkellaamaa thala kavunthu nikkanum.. appadi paatha inga mukkaalvaasi makkalukku thala niminthirukkave seiyaathu ;))

8:58 PM  
Blogger Arunkumar said...

aaha padatha pottuteenga :)

11:50 PM  
Blogger Arunkumar said...

quarterly-la 3.5
halfyearly-la 9

idhula irundhu ungalukku enna theriyudhu ?

oru quarteroda niruthikaama innoru quarterayum sethu adicha almost 3 times effect irukkum :)

aaha idhuvallavo interpretation :)

11:53 PM  
Blogger Arunkumar said...

//
மு = மாம்பழம்
சூப்பர் ஐடியா!

if so,y = வாழைபழமா? :)
//

@thala
epdi ipdi ellam yosikkireenga?
y iseekoltu Yelandapalam !!!

11:57 PM  
Blogger Ragu said...

chinna vayasula nadantha matter ellam nyabagam vachi elutharathu peria vishayam..

மு vachi nan kooda maambalam varainchi irukkaren.. but athu ellam maranthe pochi.. ur post brought those memories back :-)

keep writing..

10:43 AM  
Blogger Dreamzz said...

நம்ம கட பக்கம் வந்தமைக்கு நன்றி!1

5:52 AM  
Blogger Dreamzz said...

இப்ப மாம்பழம் வரைவீங்களா?

5:52 AM  
Blogger Osai Chella said...

')) said...

Hi Chella,
It was really a useful session :)
Thanks.,
and these photos.....just awesome!!

--Priya
//

மிக்க நன்றி ப்ரியா... உங்களையெல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கும்...

அப்புறம்.. ஒரு கேள்வி கேக்கணூம்னே அன்னைக்கே நெனைச்சேன்!! அது எப்படிங்க மத்தவங்களுக்கே தெரியாத அத்தனை ரோடையும் க்ரீக்டா சொல்றீங்க! நல்லா ஊர்சுத்துவீங்களா?!

12:55 PM  
Anonymous Anonymous said...

adhu sari.. phone veetla vachchuttu pOytta eppadi contact panRathaam ungalai ?

1:05 PM  
Anonymous Anonymous said...

I love u Syam

5:59 PM  
Blogger Dreamzz said...

http://godshavespoken.blogspot.com/2007/01/poem-ii.html

யக்கொவ்! நீங்க கேட்ட லிங்க்!

5:55 PM  
Blogger Arunkumar said...

adutha post eppo madam ?

8:23 PM  
Blogger Raghavan alias Saravanan M said...

அடடா...

'மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
பரீட்சையில வரைஞ்சி வச்ச மாம்பழம்' ‍=னு பாடியிருந்திருப்பீங்க போலத் தெரியுதே..

நல்லா விறுவிறுப்பான பதிவு..

ஆனா 'half yearly" பாத்தவுடனே நான் யூகிச்சுட்டேன்.. காப்பரீட்சையில கவுந்து நின்ன நீங்க அரைப்பரீட்சையில அசால்ட்டா எழுந்து நின்னுக்குவீங்கன்னு.. ரொம்ப படிப்ஸ்ன்னு வேற சொல்லியிருக்கீங்க.... முதல் ரேங்க் வேற கேக்கவா வேணும்?

நடத்துங்க ப்ரியா.. நடத்துங்க...

12:33 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home