Me Thinks

Name:
Location: Bangalore, Karnataka, India

Tuesday, August 07, 2007

இரகஸ்யமாய்....

டிஸ்கி: இக்கதையில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே., மீறி ஒத்துப்போகுமேயானால் அது மிகவும் தற்செயல் :)

நம்ம ஈரோ, பெரிய புத்திசாலி இல்லேனாலும், மடத்தனத்த மறைச்சுக்கர அளவுக்கு திறமைசாலி.போன வாரம்தான் USல இருந்து சென்னை வந்து இறங்கிருக்கார். இப்போ சொந்த ஊருக்கு போறதுக்கு பஸ்ல உக்காந்து இருக்கார்( வேட்டையாடு விளையாடு கமல் பிளைட்ல உக்காந்து பழச நினைச்சு பார்பாரே..அது மாதிரி).அவரே கதைய சொல்லுவார் இனி.

4 வருஷத்துக்கு முன்னால ஒரு ஜனவரிலதான் அவள மீட் பண்ணினேன்.. ஜுலி என் டார்லிங்.. வழக்கமான US பொண்ணுங்க போல இல்லாம, இவ ரொம்பவே டிபரென்ட், பெரிய பணக்காரி.. நல்ல அழகி.. வெரி சிம்பிள்... டெக்னிக்கலா வெரி பூர்..என்டகூட வந்து ப்ராஜெக்ட் டவுட் எல்லாம் கேப்பான்னா பாத்துகோங்களேன்.... இதுல எது என்னைய இம்ப்ரெஸ் பண்ணுச்சுனு எனக்கே தெரியல.....

இந்த இடம், இந்த கிழமைதான்னு இல்லாம.. ஊர் சுத்தினோம்..சுத்தினோம்..சுத்திடே இருந்தோம்..இப்பவரைக்கும்.. அவளோட நட்பு எப்போ காதல் ஆச்சுனு எனக்கு தெரியல..ஆனா எனக்கு 1st ல இருந்தே லவ் தான்.. அவ ப்ரபோஸ் பண்ணற மாதிரி தெரியல.. ஸோ நானெய் feb 14th ப்ரபோஸ் பண்ணிடேன்.

அப்போ நா பெனியயும் கரெக்ட் பண்ணிட்டு இருந்ததால.. வந்தா வருது போனா போகுதுனு தான் ப்ரபோஸ் பண்ணினேன்.. ஜுலி யே ஓ.கே சொல்லிட்டா.. பெனிக்கு வாங்கின $5 கார்ட் கூட பிரண்ட் ஒருத்தனுக்கு வித்துட்டேன்..பாவி அதுக்கு $4 தான் குடுத்தான். கேட்டதுக்கு இந்த கார்ட யூஸ் பண்ணறதுக்கு இன்னும் 1 வருஷம் காத்திருக்கனுமேனு சொல்லிட்டான்.

எதிர்பார்க்கவே இல்ல.. அடுத்த ஜனவரிலயே "டார்லிங் லெட்ஸ் கெட் மேரிட்"னு சொல்லிட்டா.. "யெஸ் டியர்" அ தவிர மத்ததெல்லாம் மறந்தே போச்சு.. US வந்த 1 வருஷத்துலயே.. என்னொட 27 வது வயசுலயே.. கல்யாணம்!!!!!


அடுத்த ஒரே வருஷத்துல.... அவசரப்படுத்தி குழந்தை பெத்துகிட்டா.. அதும்..ட்வின்ஸ்..தேவ் அன்ட் தீக்க்ஷா... நா தான் பேரு வேச்சேன்..இப்போ அவங்களுக்கு 2 வயசு ஆவுது.. இவ்ளோ விஷயமும் எங்க வீட்டுல யாருக்கும் இதுவரைக்கும் தெரியாது.. இந்தவாட்டிதான் போய் சொல்லனும்.

அப்பா திட்டி தீர்த்துடுவார்.... அம்மா, உன்னைய விட 5 வயசு பெரியவளனு பொலம்பி தீர்த்துடுவா.. ஸிஸ்டர்.. கொஞ்சம் சப்போர்ட் பண்ணலாம்..அவளும் ஏன்டா ஏதோ பக்கத்து வீட்டு நாய் பேரு மாதிரி.. அதென்ன பேரு ஜூலினு ஓட்டுவா ம்ம்ம்ம்...... பாக்கலாம்.

அதே சமயத்துல.. என் ஜூலி யும் பாவம்.. பசங்கள US ல விட்டுட்டு.. என்னைய நம்பி இங்க வந்துட்டா... எங்க வீட்டுல ஒத்துக்கர வரைக்கும் சென்னை லே இருனு ஒரு அப்பார்ட்மென்ட் பிடிச்சு அவள அங்க இருக்க வெச்சிர்கேன். எப்படிதான் வீடு, அப்பார்ட்மென்ட் , ஆபிஸ்னு சமாளிக்க போறேனோ..

எப்படியும் ஒரு 1 மாசத்துக்குள்ள..எங்க வீட்டுல ஒத்துக்க வெச்சுடுவேன்.. லவ் யூ ஸோ மச் டா ஜூலி...


முற்றும்.

என்ன Dreamzz ஏதாவது புரிஞ்சதா???

இன்னும் புரியலயா???!!!??? :(

என்ன கொடுமை இது Ace!!!! :(

Be happy
Priya :)